ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 15,000 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரத்தின் தேவை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இல்லாத வழக்கமான காலங்களில் வீடு, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களின் மின்நுகர்வு சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் அளவு இருக்கம்.  இந்நிலையில் கொரோனா 2ம் அலை காரணமாக முதல் 2 வாரம் தளவுர்கள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை இயங்கவில்லை. இதன் காரணமாக மின்நுகர்வு பெருமளவில் குறைந்தது.  இதையடுத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில், மேலும் சரிவு ஏற்பட்டது.

இதன்படி கடந்த ஜூன் 4ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 12,036 மெகாவாட்டாக குறைந்தது. அனல்மின்நிலையங்களில் மின்உற்பத்தி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தமிழக அரசு, பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்தியது. இதனால் அரசு அலுவலகங்கள், பலசரக்கு கடைகள் உள்பட தனிநபர் கடைகள், சில தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. உதிரிபாகம் மற்றும் பழுதுநீக்கும் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுதும் மின்நுகர்வு அதிகரித்தது. மற்றொருபுறம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி (ஜூன் 11ம் தேதி) தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 13,772 மெகாவாட்டாக அதிகரித்தது.

இவை இரண்டுக்குமான இடைவெளி 1,736 மெகாவாட் ஆகும். இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் குறைந்ததையடுத்து, தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை வழங்கியுள்ளது. இந்த ஊரடங்கு நாளை முதல் 21ம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி. இதனால் மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும் வாய்ப்புள்ளது.

மின்தேவை உயர்வு விவரம்

தேதி    ஒட்டுமொத்த மின்தேவை (மெகாவாட்டில்)

5/6/21    11,381

6/6/21    11,234

7/6/21    12,917

8/6/21    12,950

9/6/21    13,355

10/6/21    13,352

11/6/21    13,772

Related Stories:

>