கொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு

கும்பகோணம்: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தஞ்சை மாவட்டத்திற்கு 13,100 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை உள்பட 77 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கியது. இதில் கும்பகோணம் நகராட்சி காரனேசன் மகப்பேறு மருத்துவமனையில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இதனால் காலை 7 மணி முதலே அதிக அளவில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி, வடக்கு வீதியை சேர்ந்த முரளி மனைவி வள்ளிக்கண்ணு (40) என்பவரும் தடுப்பூசி போடுவதற்காக காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்றிருந்தார்.

அப்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிய வள்ளிக்கண்ணு மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் நின்றிருந்தவர்கள் அருகில் வந்து பார்த்த போது அவர், எந்த அசைவும் இல்லாமல் கிடந்தார். தகவல் அறிந்து வந்த மருத்துவர்கள் வள்ளிக்கண்ணுவை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து  உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

Related Stories:

>