ஆன்லைனில் ஜமாபந்தி விண்ணப்பங்கள்

சென்னை: தமிழக வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவு: ஜூன் மாதம் அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடத்தப்படும். கடந்த ஆண்டு (2020) கொரோனா காரணமாக ஜமாபந்தி நடத்தப்படவில்லை. அதற்கு பதில், ஜமாபந்தில் மனு கொடுக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவே வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் (2021) கொரோனா பரவல் இருப்பதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு போலவே ஆன்லைன் மூலமே விண்ணப்பங்கள் பெற்று, அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>