தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நேற்றுடன் ஒரு கோடியே 1 லட்சத்து 30,594 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது. அந்த வகையில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதன்முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்துதான் முதியவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பமானது. இதற்கு பிறகு இளம்வயதினரையும் இந்த தொற்று பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லி வந்ததால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டது.

இதையடுத்து, இப்போது பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து தடுப்பூசி  போட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மட்டும் 3,26,573 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை  1,01,30,394 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது  இவர்களில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட 19,59,229 பேருக்கும், 45 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 35,93,239 பேருக்கும், 60 வயதுக்கு மேற்ப்பட்ட 26,80,585 பேர் என 1,01,30,594 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  அதேசமயம் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக நேற்றுடன் 1 கோடிக்கும்  மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி ஒரே தீர்வு என்பதால்  அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Related Stories: