விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

விருதுநகர்:  தமிழகத்திலேயே முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நோயாளிகள் பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைத்தனர்.  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  முதலாவதாக பி.எம் கேர் நிதியின் கீழ் மத்திய ராணுவ அமைச்சக ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.97.40 லட்சத்தில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் கட்டுமான பணிகளை மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது.

இதில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் மருத்துவகல்லூரி வளாகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் 200 நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும்’’ என்றார்.

Related Stories: