சீனாவின் கொடுமையை வெளிகாட்டியவர் தமிழக வம்சாவளியை சேர்ந்த மேகாவுக்கு ‘புலிட்சர்’ விருது

நியூயார்க்:  உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும், 21 பிரிவுகளில் புலிட்சர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 105வது ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று  அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட லண்டனில் வசிக்கும் மேகா ராஜகோபாலன் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை பெற்றுள்ளார். இவர் சீனாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இதற்காக இந்த விருதை பெறுகிறார்.  இதேபோல், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க பத்திரிகையாளர் நைல் பேடி உள்ளூர் செய்திக்கான பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளார். இவர் வெளியிட்ட புலனாய்வு செய்திகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வீடிேயா வெளியிட்ட  பெண்ணுக்கும் விருது

அமெரிக்காவின் மின்னியாபோலிசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனை டார்னெல்லா பிரேசியர் என்ற 17 வயது இளம்பெண் வீடியோ எடுத்து வெளியிட்டார். இது உலகம் முழுவதும் வைரலாகி, அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்தது. இந்த பெண்ணுக்கும் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>