ஹஜ் புனித பயணம் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

துபாய்:   ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணத்துக்கு 160 நாடுகளை சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து செல்வார்கள். குறிப்பாக, மூன்றில் இரண்டு பங்கினர் வெளிநாட்டினராக இருப்பார்கள். இந்தாண்டுக்கான யாத்திரை ஜூலை மத்தியில் தொடங்குகிறது, இதில் பங்கேற்க வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உளநாட்டில்  வசிக்கும்  18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம். சவுதியில் வசிப்பவர்கள், இங்கு தங்கியுள்ள வெளிநாட்டினர் மட்டுமே பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>