மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சேலம்: மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அவசியமின்றி யாரும் வெளியில் சுற்ற வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் மேட்டூர் அணை திறப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை விரைவில் முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகள் பெருமளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கூடுதலாக ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>