பெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் மாநிலங்களுக்கு 25.60 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே கேரளாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு கொள்கிறனர். கேரளாவில் 1,000 ஆண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது, பெண்களில் 1,087 பேர் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

இதில் தேசிய சராசரி 854 ஆகும். கேரளாவிற்கு அடுத்த படியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 1,045 பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். தமிழகத்தில் தடுப்பூசி போடுவதில் பெண்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது. 1,000 ஆண்களுக்கு 811 பெண்கள் மட்டுமே தடுப்பூசி போடுகின்றனர்.

Related Stories: