கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று கேரளாவில் 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 15ம் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 15ம் தேதி வரை கேரள கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>