நாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்

நாங்குநேரி: திருச்சியில் இருந்து ேகாதுமை மாவு லோடு ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் நோக்கி லாரி ஒன்று நேற்றிரவு புறப்பட்டு வந்தது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த முத்துக்குமார்(40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நாங்குநேரி அருகே நம்பியாற்று பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமானது. மேலும் லாரி டிரைவர் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த லாரி டிரைவர் முத்துக்குமார், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>