காதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலக்கை சேர்ந்த ரகுமான் என்ற வாலிபர் தனது காதலியை 10 வருடங்கள் வீட்டிற்குள் மறைத்து வைத்து குடும்ப நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் காதலனின் தந்தை இந்த சம்பவம் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள  மாநிலம், பாலக்காடு  அய்லூரை சேர்ந்த ரகுமான் என்ற எலக்ட்ரீஷியன் தனது காதலியை பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் 10 ஆண்டுகள் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ரகுமானின் தந்தை முகம்மது கரீம்,  எனது மகன் ரகுமான் தனது காதலி சஜிதாவை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எங்களது வீடு மிகவும் சிறிய வீடாகும். எனது மகன் ரகுமான் தங்கிருந்த அறையில் கட்டில் கூட கிடையாது. சஜிதா அறையில் இருந்து வெளியேறியாக கூறப்படும் ஜன்னலில் சமீபத்தில் தான் கம்பிகள் அகற்றப்பட்டு பலகை வைக்கப்பட்டது. எனவே 10 வருடங்களாக அந்த ஜன்னல் வழியாக சென்று வந்ததாக கூறியதை ஏற்க முடியாது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிகள் நடந்தன. அப்போது அந்த அறை திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் சஜிதா தங்கியிருந்தால் எங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் அறையில் சுவர் பாதி மட்டுமே எழுப்பப்பட்டிருந்தது.  எனவே அந்த அறையில் யார் இருந்தாலும் எங்களுக்கு தெரியும்.

இதனால் கடந்த 10 வருடங்களாக வீட்டிற்கு அடைத்தி வைத்திருக்க வாய்ப்பே கிடையாது. ரகுமான் சஜிதாவை வேறு எங்காவது அடைத்து வைத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இதை ரகுமான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய அறையில் தான் சஜிதாவை நான் வைத்திருந்தேன். முழு ஊரடங்கு வந்ததால் வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் உணவுக்கு சிரமம் ஏற்பட்டது. வீட்டில் இருந்து சாப்பாடு கிடைக்கவில்லை. எனது பெற்றோருக்கு பயந்துதான் காதலியை வீட்டில் மறைத்து வைத்திருந்தேன். இதனால் தான் வேறு வழியில்லாமல் சஜிதாவை அழைத்து கொண்டு வெளியேறினேன். 10 வருடங்களாக சஜிதாவுக்கு நோய் எதுவும் வரவில்லை.

தலைவலி. காய்ச்சல் வந்தால் மாத்திரை வாங்கி கொடுப்பேன். நான் பட்டினி கிடந்தாலும் எனது காதலியை நான் பட்டினி போடவில்லை என்றார். ரகுமான் குறித்து சஜிதா கூறியது; 10 வருடம் நான் அறையில் இருந்தது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ரகுமான் எனக்கு எந்த துன்பதையும் தரவில்லை. 10 வருடத்திற்கு பின் எனது பெற்றோர் சந்திந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இதற்கிடையே சஜிதாவின் தந்தை வேலாயுதன், தாய் சாந்தா ஆகியோர் நேற்று மகள்  தங்கிருந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது கண்ணீர் மல்க சஜிதா பெற்றோரை வரவேற்றார். பெற்றோரும் நீண்ட நேரம் மகளை கட்டிபிடித்து அழுதனர்.

இதுகுறித்து தாயார் சாந்தா கூறியதாவது, இத்தனை வருடங்கள் எனது மகள் சஜிதா கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தார் என்பதை என்னால் நம்ம முடியவில்ைல. போலீசார் விசாரணை நடத்தியும் கண்டுபிடிக்க முடியாததால் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன் இருப்பாள் என கருதினேன். இவ்வாறு அவர் கூறினார்.

மகளிர் ஆணையம் வழக்கு

10 வருடங்களாக சஜிதாவை வீட்டு அறையில் அடைத்து வைத்திருந்தது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஒரு பெண்ணை 10 வருடங்களாக அடைத்து வைத்திருந்தது மிகவும் கொடுமையான செயலாகும்.  எனவே இதுதொடர்பாக வழக்குபபதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்க செய்ய ேவண்டும் என்று நென்மாறா போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ேமலும் சஜிதாவின் உடல்நிலையை பரிசோதித்துவிட்டு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: