ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இம்முறையும் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆனி மாத பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி இரவு 9 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆனி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இம்முறையும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

Related Stories: