சென்னையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது!: போலீசார் அதிரடி..!!

சென்னை: சென்னையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கரும்பூஞ்சை சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டிடம் அருகே கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், ஆம்போடெரிசின் மருந்துகளை விற்பனை செய்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த உம்மு குல்சம், கானாத்தூரை சேர்ந்த பௌஸானா, காட்டாங்குளத்தூரை சேர்ந்த விவேக் மற்றும் செஞ்சியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து எட்டு குப்பிகள் ஆம்போடெரிசின் மருந்தை பறிமுதல் செய்த போலீசார், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆம்போடெரிசின் மருந்தினை பெங்களூருவில் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னையில் 40,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: