தமிழகத்தில் பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை!: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்..!!

நாமக்கல்: தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிரடியாக நடைபெற்ற சோதனையில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரித்த போது, ஓசூரை சேர்ந்த இருவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இருவரையும் கைது செய்த போலீசார் 1,020 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். கொரோனா பாதிப்பு இருப்பதாக நாடகமாடி ஓசூரில் இருந்து கரூருக்கு இருவரும் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் காய்கறி ஏற்றி வந்த லாரியில் தக்காளி கூடைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மதுபாட்டில்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சிவா மற்றும் சையது அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Related Stories: