புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகருக்கான தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பேரவை தலைவருக்கான தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று பேரவையின் செயலாளர் முனுசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.

சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நடத்த புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேரவை தலைவர் தேர்தலுக்கு வரும் 15ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது என்றும் தற்காலிக பேரவை தலைவர் லட்சுமி நாராயணன் இந்த தேர்தலை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவை தலைவர் பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் மனவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலன் செல்வன் என்பவர் மனுதாக்கல் செய்கிறார். துணை பேரவை தலைவர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>