ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் கடன் தவணையை கட்டாய வசூல் செய்யக்கூடாது!: நிதி நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் கடன் தவணையை கட்டாய வசூல் செய்யக்கூடாது என்று நிதி நிறுவனங்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு காவல் நிலையத்தில் தனியார் நிதி நிறுவனங்களுடன், துணை கண்காணிப்பாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா காலத்தில் பொதுமக்களை கடன் தவணை செலுத்த நிர்பந்தம் செய்ய கூடாது என்று அறிவுறுத்தினார். 

பொதுமக்களிடம் கடன் வசூலிப்பதில் அடாவடி போக்கை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட்டிக்கு வட்டி என்று கூடுதல் வட்டி கேட்க கூடாது என்றும் பொதுமக்களின் நிதி நிலைமையை அறிந்து மென்மையாக போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில் பொதுமக்களிடம் கட்டாயம் வசூலில் ஈடுபட மாட்டோம் என்று தனியார் நிதி நிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் தனியார் நிதியை நிறுவனங்கள் கடனை கேட்டு அடாவடியில் ஈடுபடுவதாக பல்வேறு இடங்களில் புகார் எழுந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: