காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சம் 97 டிகிரி; குறைந்தபட்சம் 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16-ந் தேதிவரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலேயே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா, அரபிக் கடல், கேரள, கர்நாடகா கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>