மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் நீர் தீர்ப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். முதல்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காவிரி ஆற்றில் மலர் தூவினார். முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணை திறப்பால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பெறும். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மாவட்டங்கள் பயன்பெறும். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்ததால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலமாக மேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். முப்போக விளைச்சலுக்கு மேட்டூர் அணை நீர் முக்கியமானது. அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 12ஆம் தேதிக்கு முன்னதாகவோ, ஒரு சில நாட்கள் கழித்தோ அணை திறக்கப்படும்.

இந்த முறை 12ம் தேதியே திறந்தாக வேண்டும் என உறுதியாக இருந்த முதல்வர் ஸ்டாலின், அதை செயல்படுத்திவிட்டார். பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி, சரியான நேரத்தில் தண்ணீர் திறப்பு என விவசாயிகளை திமுக அரசு மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் திறந்து வைத்து பேசிய அவர் கூறியதாவது; உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார். குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையை திறப்பதன் மூலம் சரியான காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஜூன் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

Related Stories:

>