2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக சமுதாயம் கீழடியில் வாழந்துள்ளது கார்பன் ஆய்வில் தெரிய வந்துள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணி 2020 வரை தொடர்ந்து ஆறு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இதனிடையே பிப்ரவரி 13ம் தேதி முதல் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கீழடி அருங்காட்சி கட்டிடப் பணி குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் மதுரை எம்.பி. வெங்கடேசன், ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக சமுதாயம் கீழடியில் வாழந்துள்ளது கார்பன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.கதிரன் போன்ற முழு பெயர்கள் எழுதப் பெற்ற ஓடுகள் முதல்முறையாக கீழடியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. மணிகள், பனை ஓடுகள் உட்பட 700க்கும் மேற்பட்ட புதிய பொருட்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கீழடி அகழாய்வு குறித்த ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும், என்றார்.

Related Stories:

>