தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..! சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,605-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் நாடெங்கிலும் பொதுமுடக்கம் அமலாகி இருக்கும் நிலையில், தொழில்துறை தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. கடந்த ஆண்டும் இதே போல சூழல் நிலவியது. பல மாதங்கள் லாக்டவுன் போடப்பட்டதால் தொழில்துறை தேக்கம் அடைந்தது.

அச்சமயம் தங்கத்தின் மீதான முதலீடுகள் பன்மடங்கு அதிகரித்து , தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை. எனினும், தொழில்துறை தேக்கம் குறித்த அச்சத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,605க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,300க்கும் விற்பனையாகிறது.

Related Stories:

>