சில்லி பாயின்ட்...

* பிரெஞ்ச் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு பைனலுக்கும் பார்போரா கிரெஜ்சிகோவா தகுதி பெற்றுள்ளார். சக வீராங்கனை கேதரினா சினியகோவாவுடன் இணைந்து களமிறங்கியுள்ள அவர் அரை இறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மாக்தா லினெட் (போலந்து) - பெர்னார்டா பெரா (அமெரிக்கா) ஜோடியை நேற்று வீழ்த்தினார்.

* மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த இகா ஸ்வியாடெக் (போலந்து), இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெதானி மேட்டக் சேண்ட்சுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அரை இறுதியில் ஐரினா பெகு (ருமேனியா) - நடியா பொடரோஸ்கா (அர்ஜென்டினா) ஜோடியை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நேற்று வீழ்த்திய ஸ்வியாடெக் - பெதானி ஜோடி பைனலுக்கு முன்னேறியது.

* நியூசிலாந்து அணியுடன் பர்மிங்காமில் நடக்கும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 303 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பர்ன்ஸ் 81, சிப்லி 35, லாரன்ஸ் 81*, ஸ்டோன் 20, வுட் 41 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 4, ஹென்றி 3, அஜாஸ் 2, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசி. 47 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது கேப்டன் லாதம் 6, கான்வே 80 ரன்னில் ஆட்டமிழந்தனர். வில் யங் 44, டெய்லர் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

* முன்னணி வீரர், வீராங்கனைகள் காயம் அடைவதை தவிர்ப்பது/தடுப்பது, போட்டிகளின்போது காயம் அடைந்தால் அதற்குரிய உயர்தர சிகிச்சை, உடல்தகுதி மேம்பாடு, மருத்துவ ஆவணங்களை சேமித்தல் போன்ற அம்சங்களை ஆன்லைனில் தொடர்ச்சியாக கண்காணித்து செயல்படுத்துவதுடன் தக்க ஆலோசனை வழங்குவதற்கான ‘கெய்ம்ஸ்’ என்ற திட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தொடங்கி வைத்தார்.

* டோக்கியோ ஒலிம்பிக் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 18,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

>