12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!: அமெரிக்காவின் FDA அமைப்பினர் தீவிர ஆலோசனை..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உயர்மட்ட குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருவதை அடுத்து பல்வேறு நாடுகள் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி அளிக்க அனுமதி அளித்துள்ளன. 

கடந்த 4ம் தேதியில் இருந்து பிரிட்டனில் 12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜெர்மனியும் கடந்த 7ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மே 10ம் தேதியில் இருந்து 12 முதல் 15 வயதான சிறார்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் 12 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து FDA இன்று தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. 

அமெரிக்காவின் மேரிலாண்டில் நடைபெற்ற கூட்டத்தில் FDA வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி அளிப்பது குறித்து கலந்துரையாடினர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் நற்பயனை அளித்து வருவதால் அமெரிக்காவில் விரைவில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி அளிக்க FDA அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.

Related Stories: