×

கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களுக்குள் 2ம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: வெளிநாடுகளில் பணிபுரிந்து விடுமுறை மற்றும் அவசர காரணங்களுக்காக தமிழகம் வந்தவர்கள், மீண்டும் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதை கவனத்தில் கொண்டு, 2ம்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால அளவை 84 நாட்களிலிருந்து 4 வார குறுகிய இடைவெளியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ெளிநாடு செல்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட 84 நாட்களுக்கு முன்னதாகவே 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  இதன்படி, முதல்கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்களும் முன்னதாகவே (முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்கள் கழித்து) இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு இந்த வசதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகார குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அக்குழு உரிய முறையில் ஆவணங்களைக் கொண்டு பரிசீலித்து, இரண்டாம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இதனை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.Tags : Tamil Government , hase 2 vaccine vaccine for those going abroad for education and work within 28 days: request to the Government of Tamil Nadu
× RELATED பள்ளிகளை மேம்படுத்தும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு: கமல்ஹாசன் அறிக்கை