×

ஐரோப்பிய நாடுகளில் உற்சாகம்: இன்று முதல் யூரோ கோப்பை கால்பந்து: ரசிகர்களுக்கு அனுமதி

ரோம்: உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த , ஐரோப்பியாவின் 24  நாடுகள் பங்கேற்கும்  ‘யூரோ  கோப்பை  2020’  கால்பந்து போட்டி இன்று  இத்தாலியின் ரோம் நகரில்  தொடங்குகிறது. ஐரோப்பிய கண்டத்தின் முக்கிய கால்பந்து தொடரான யூரோ கால்பந்து, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் .   கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ‘யுரோ 2020’ கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் ‘யூரோ 2020’ என்ற பெயரிலேயே நடத்தப்படுகிறது. கால்பந்து உலகின் முன்னணி நாடுகளான  ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் என 24 ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும்  யூரோ கால்பந்து இன்று  தொடங்குகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடக்கும்.  இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரோம் நகரில்  தொடங்கும் முதல் ஆட்டத்தில் துருக்கி-இத்தாலி அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று  ஜூன் 23ம் தேதி முடியும். அதன் பிறகு நாக் அவுட் சுற்றுகளான  சுற்று-16,   ஜூன் 26ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடக்கும். காலிறுதி ஆட்டங்கள்  ஜூலை 2, 3 தேதிகளிலில் நடத்தப்படும்,  அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7 தேதிகளிலும்.  இறுதிப்போட்டி  ஜூலை 11ம் தேதியும்  லண்டனில்  நடக்க உள்ளன.
மொத்தம் 51 ஆட்டங்கள்  ஐரோப்பியாவின் 11 நகரங்களில் நடக்கின்றன. போட்டியை  இத்தாலி, டென்மார்க்,  நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, ரஷ்யா , ஜெர்மனி, ஸ்காட்லாந்து, போர்ச்சுகள், அஜர்பைஜான்  என 11 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இதில் அஜர்பைஜான் யூரோ தொடருக்கு தகுதிப் பெறவில்லை. அதேபோல் பின்லாந்து, வடக்கு மசிடோனியா நாடுகள் முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளனர்.

களத்தில்....
பிரிவு ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து
பிரிவு பி:டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா
பிரிவு சி: நெதர்லாந்து,  உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மசிடோனியா
பிரிவு டி: இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு
பிரிவு ஈ: ஸ்பெயின், ஸ்வீடன், போலாந்து, ஸ்லோவாக்கியா
பிரிவு எப்:  ஹங்கேரி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மினி

சாம்பியன்கள்...
யூரோ கோப்பை தொடரின் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல்(2016). இதுவரை நடந்த 15 தொடர்களில்  ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள்  தலா 3முறையும்,  பிரான்ஸ் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன. முதல் சாம்பியன் சோவியத் ரஷ்யா(1960), இத்தாலி, செக்கோஸ்லோக்கியா, நெதர்லாந்து, டென்மார்க், கிரீஸ்,  போர்ச்சுகல் அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வசப்படுத்தியுள்ளனர்.

களங்கள்....
ரோம்(இத்தாலி), லண்டன்(இங்கிலாந்து), பாகு(அசர்பைஜான்),  செயின் பீட்டர்ஸ்பர்க்(ரஷ்யா),  செவில்லே(ஸ்பெயின்),  புசெரெஸ்ட்(ருமேனியா), ஆம்ஸ்டெர்டம்(நெதர்லாந்து), கிளாஸ்கோ(ஸ்காட்லாந்து),  மியூனிக்(ஜெர்மினி), புதாபெஸ்ட்(ஹங்கேரி),  கோபென்ஹகென்(டென்மார்க்).

ரசிகர்களுக்கு...
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மிகவும் குறைவாக  இருப்பதால் போட்டிகளை காண ரசிர்களை அனுமதிக்க உள்ளனர்.  புதாபெஸ்ட் நகரில்  ஆட்டத்தைக் காண 100சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும்   பீட்டர்ஸ்பர்க், பாகு நகரங்களில்  தலா 40  சதவீதமும், மியூனிக், லண்டன் நகரங்களில் தலா  25 சதவீதமும், ஆம்ஸ்டெர்டம், புசெரெஸ்ட் , கோபென்ஹகென், கிளாஸ்கோ, ரோம், செவில்லே நகரங்களில்  25 முதல் 45 சதவீதமும்  ரசிகர்களுக்கு அனுமதி தர உள்ளனர்.

Tags : European ,Euro Cup football , Excitement in European countries: Euro Cup football from today: Permission for fans
× RELATED சில்லிபாயின்ட்..