விளையாட்டு துளிகள்

அதிக ஆட்டம்

இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட்களில்  விளையாடிய வீரர் என்ற சாதனையை  வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.  பிர்மிங்ஹாமில் நேற்று தொடங்கிய இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட்  போட்டி,  அவருக்கு 162வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அலிஸ்டயர் குக் 161டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி  உள்ளார்.

கூலி வேலையில் சர்வதேச வீராங்கனை

பஞ்சாப் மாநிலம் மானசா மாவட்டத்தைச்  சேர்ந்தவர் சர்வதேச கராத்தே  வீராங்கனை ஹர்தீப் கவுர்(23). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்.  உடற்கல்வியலில் முதுகலை பட்டம்  பெற்றுள்ளார். கவுர் சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என  20க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனைகளுக்காக வேலை தருவதாக சொன்ன பஞ்சாப் அரசு, 3 ஆண்டுகளாக  கண்டுக்கொள்ளவில்லை. போட்டியில் பங்கேற்க, குடும்பத்தை காப்பாற்ற கவுர், இப்போது    விவசாய பண்ணைகளில்   கூலி வேலை செய்கிறார்.

கடின உழைப்பு தேவை

இந்தியாவுக்காக 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ளார் ஹாக்கி வீராங்கனை லிலிமா மின்ஸ். நடுகள ஆட்டக்காரரான லிலிமா, ‘ அணியில் திறமையான இளம் வீராங்கனைகள் உள்ளனர். கடின உழைப்பு ஆடம் அணியில் வாய்ப்பை பெற்றுத்தரும்’ என்று கூறியுள்ளார்.

மீண்டும் மோதல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பாக் முன்னாள் கேப்டன் இன்சாம் உல் ஹக் வலியுறுத்தியுள்ளார்.

டிங்கோ சிங்

மரணம்

மணிப்பூரைச் சேர்ந்த  டிங்கோ சிங்(42). குத்துச்சண்டை வீரரான டிங்கோ, 1998ம் ஆண்டு   ஆசிய விளையாட்டுப்போட்டியில்  54எடை பிரிவில் தங்கம் வென்றவர்.  இந்திய கப்பல் படையில் பணியாற்றி வந்த  டிங்கோ கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்தும் மீண்டார். இந்நிலையில்  அவர் நேற்று இம்பாலில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

நிறுத்த வேண்டும்

இங்கிலாந்து வீரர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களை கேலி செய்துவெளியிட்ட கருத்துகள் இப்போது வைரலாகின்றன. இது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘ மோர்கன், பட்லர், ஆண்டர்சன் ஆகியோர் இதுப்போன்ற கருத்துகளை தெரிவித்த போதே ஏன் பதிலடி கொடுக்கவில்லை. அவற்றுக்கு பல ஆண்டுகள் கழித்து பதிலடி தருவது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் இது அபத்தமானது. நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: