×

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு ராணா உதவி

சென்னை: 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு நடிகர் ராணா உதவிகளை செய்து வருகிறார். முன்னணி தெலுங்கு நடிகர் ராணா. பாகுபலி, காடன் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். கொரோனா காலத்தில் தெலுங்கு நடிகர்கள் பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் ராணா, தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள 400 ஆதிவாசிகள் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான்கள், மருந்துகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். விராடபருவம் என்ற படத்தில் ஆதிவாசி மக்களுக்காக போராடும் நக்சலைட்டாக ராணா நடித்தார். இதன் படப்பிடிப்புகள் இங்கு நடந்தபோது ஆதிவாசி மக்களோடு நெருங்கி பழகினார். அப்போதிலிருந்தே அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கை பற்றி அறிந்தவர், அவர்களுக்கு அவ்வப்போது உதவி வந்தார். கொரோனா காலத்தில் மேலும் பல உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார்.Tags : Rana assistance to 400 tribal families
× RELATED அண்ணாமலை பல்கலை-யில் தொலைதூரக் கல்வி...