×

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு துவக்கம்

செய்துங்கநல்லூர்: தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்.26ம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் 2ம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் தொடங்கியது. கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமடைந்ததால் அகழாய்வு பணிகள் மே 10 முதல்  நிறுத்தப்பட்டது.  ஒரு மாதத்திற்கு பின் நேற்று ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கியது.  முதல் கட்டமாக அகழாய்வு செய்யப்படும் இடங்கள், குழிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் மாநில அரசு அகழாய்வு செய்ய செப்டம்பர் மாதம் வரைதான் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் தொல்லியல் அதிகாரிகள் வேலைகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளனர்.Tags : Aitmanur , Excavation resumes at Adichanallur
× RELATED ஒன்றரை ஆண்டுகளாக ஆள் அரவமற்று...