×

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை தர லஞ்சம் வாங்கும் சுகாதார ஆய்வாளர்; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க, பிணவறை அருகே, பைக்கில் உட்கார்ந்தபடி உறவினர்களிடம் ேவலூர் சுகாதார ஆய்வாளர் ெவங்கடேசன் ₹500 லஞ்சம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு சுகாதார ஆய்வாளரான இளங்கோவும் லஞ்சம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து துணை இயக்குனர் மணிவண்ணன் கூறுகையில், ‘லஞ்சம் வாங்கிய வெங்கடேசன் கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், இளங்கோ ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்ைக எடுக்கப்படும்’ என்றார்.Tags : Vellore Government Hospital ,Bribe Health Inspector , Coroner who died of corona at Vellore Government Hospital is a health inspector who bribes the quality of the body; Video viral on social websites
× RELATED வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி...