×

ஜூன் 12 மற்றும் 13 தேதிகளில் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வரும் 12 மற்றும் 13 தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இருந்து இந்த மாநாடு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் இவ்வாறாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பது இது இரண்டாவது முறையென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு பிரெஞ்சு அதிபர் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பியார்டிசில் இந்த மாநாடு நடைபெற்றது. தற்போது பிரிட்டனில் நடைபெறும் கூட்டத்துக்கு பிரதமர் நேரடியாக செல்வதாக இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தால் இந்தப் பயணம் ரத்தானது.

இந்நிலையில் காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். இந்தியாவுடன், ஆஸ்திரேலியா, தென் கொரிய நாட்டுத் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்த மாநாட்டில் ஒவ்வொரு முறையும் சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட குறிப்பிட்ட சில கூட்டங்களில் பங்கேற்க வைக்கப்படுகின்றனர்.Tags : Modi ,G7 , modi
× RELATED ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!