×

கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கும் 2-டிஜி மருந்தினை அதிக அளவில் தயாரிக்க ஒப்பந்தம்

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அதிக அளவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நிறுவனங்கள் மூலம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில் டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கொரோனா மருந்தை தயாரித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்தது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது. இந்த மருந்து தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வகமான இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகமும் (ஐஐசிடி), ஹைதராபாத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமான லீ ஃபார்மாவும், 2-டியாக்சி-டி-க்ளுகோஸ் (2-டிஜி) மருந்தின் கூட்டுமுயற்சியில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை பெறுவது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்க இருப்பதாக லீ ஃபார்மா தெரிவித்தது.

சிறப்பு பொருளாதார மண்டலம், துவ்வடா, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தில் சர்வதேச ஒழுங்குமுறை முகமைகளால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள லீ ஃபார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் 2-டிஜி மருந்து பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : Corona , corona
× RELATED கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு...