பெண் சக்தியை நிரூபிக்க ஒரு பயணம்!

நன்றி குங்குமம் தோழி

சுற்றுலா என்றாலே நம் அனைவருக்கும் கொள்ளை பிரியம் உண்டு. அதிலும் வீடு போன்று அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன் வேனில் சுற்றுலா செல்வதென்றால் யாருக்குதான் கசக்கும். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் மலைப்பாங்கான இடங்களில்  இயற்கையை ரசித்தபடி தங்களின் உற்சாக பயணத்தை தொடங்கியுள்ளனர் 2 பெண்கள்.

அவர்கள் பெங்களூரை சேர்ந்த அங்கிதா குமார் மற்றும் மும்பையை சேர்ந்த சரண்யா.  கன்டன்ட் கிரியேட்டராக பணியாற்றி வரும் இவர்கள் தங்களுடன் ஆண்கள் யாரையும் துணைக்கு அழைத்து ெசல்லவில்லை.

பெண் சக்தியை நிரூபிக்கதான் இந்த பயணம் என்கிறார்கள் இருவரும்இவர்களின் இந்த பயணத்துக்கு முன்னோடியாக இருந்தது தன்னுடைய முந்தைய பயண அனுபவம் தான் என்கிறார் அங்கிதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு 100 நாட்கள் சாகச பயணம் ஒன்றை மேற்கொண்டார். அதுதான் மற்றும் ஒரு பயணம் ெசய்ய அவரை தூண்டியுள்ளது.

அந்தப் பயணத்தை அங்கிதா தன் நண்பர்களான, பைக்கர் ரோகித் சுப்ரமணியன் மற்றும் புதுமை விரும்பியான அயர்லாந்து நாட்ைட சேர்ந்த வில்லியத்துடன் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுலா பயணம் தான் இப்போது அவருக்கு கைகொடுத்துள்ளது. கேரளாவில்  தொடங்கி இமாச்சல் வரை மெடாடர் காரில் சாகச பயணம் மேற்கொண்டனர் அங்கிதா மற்றும் நண்பர்கள்.

என்னதான் இந்தியாவிற்குள் பயணம் இருந்தாலும், அதில் பல சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள ேவண்டி இருந்தது, குறிப்பாக எல்லைகளில் பயணம் ெசய்யும் ேபாது என்கிறார் அங்கிதா. அதனால் ரிலாக்சாக ஒரு பயணத்ைத மேற்ெகாள்ள விரும்பினார் அங்கிதா. தன் பயணத்தை பற்றி தன் ேதாழி சரண்யாவிடம் கூற. அவரும் அங்கிதாவுடன் கைேகார்த்துள்ளார். அப்புறம் என்ன இரண்டு பெண்களும் பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தனர்.

ஆண்களால் முடியும் என்னும்போது ஏன் பெண்களால் முடியாதா என்ற கேள்வியுடன் இந்த பயணத்தை இருவரும் திட்டமிட்டனர். அதில் முதலில் அவர்கள் மேற்கொண்டது லூனா என்ற வேனை கேரவனா மாற்றியது. ஜூன் மாதம் முதல் வாரம் சிக்கிமில் தங்களின் அதிரடிப் பயணத்தை தொடங்கியுள்ளனர். உடை மாற்றும் அறை, கழிவறை, டைனிங் ஹால் என சகல வசதிகளும் கேரவனில் அமைத்துள்ளனர்.

‘‘எங்கள் பயணத்தின் முக்கிய ேநாக்கம், மற்ற மாநில மக்களின் கலாச்சாரம், உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கம் அனைத்தும் இந்த பயணம் மூலம் தெரிந்து கொள்ள ேவண்டும் என்பது தான்’’ என்றனர். இயற்கை அழகை ரசிப்பதுடன் சுற்றுப்புறச்சூழல் குறித்து விழிப்புணர்வும்

ஏற்படுத்துகிறார்கள்.

‘‘இந்த மாதம் முழுதும் சிக்கிமில் தான் எங்களின் பயணம். இங்குள்ள மக்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே ெபண்களின் சக்தியை நிரூபிக்கத்தான்’’ என்கின்றனர் இருவரும் கோரசாக.

- கோமதி பாஸ்கரன்

Related Stories: