தொர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,040க்கு விற்பனை்; நகை பிரியர்கள் வேதனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,630-க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் ரூ.37,020க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,625க்கு விற்பனையானது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறு முகத்தில் உள்ளது. அதனால்  நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த வருடம் தொடக்கம் முதலே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் விலை சரிவதும், மறுநாளே ஏறுமுகத்தை சந்திப்பதும் தங்கத்தின் வேலையாக இருந்தது. தங்கம் வாங்கவே வேண்டாம் என்ற மனநிலைக்கு அதன் விலை உயர்வு காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டிருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. 

கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்திருப்பது  நகை பிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories: