உருண்டை மோர்க்குழம்பு

செய்முறை

Advertising
Advertising

முதலில் சிறிதளவு துவரம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஊற வைத்து அரைத்து, மோர், உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும். இத்துடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பு கலவையை போட்டு கெட்டியாகக் கிளறவும். இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும். வாணலியில் மோர் கலவையுடன், வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் சுவையான உருண்டை மோர் குழம்பு ரெடி.