தமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது: முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடு மகிழ்ச்சியாக இருப்பதாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில், காணொலி காட்சி வாயிலாக மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்  நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக்கூறினார். அப்போது, வீட்டு தனிமையில் இருப்பவர்களுடன் மருத்துவர்கள்  தினம்தோறும் பேசி மருத்துவ ஆலோசனை வழங்கி வருகிறார்கள். தடுப்பூசி போடும்போது மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசியை போட உள்ளோம். ஆம்புலன்ஸ் திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று  முதல்வர் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, சென்னையை போலவே மற்ற மாநகரங்களிலும் இந்த நடைமுறைகளை பின்பற்றலாம். தமிழக அரசின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று பாராட்டு தெரிவித்தார்.

Related Stories:

>