3வது முறையாக ரயில் மூலம் தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வருகை

சென்னை:  வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 3வது முறையாக ரயில் மூலம் ஆக்சிஜன்  கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைபடுவதால் வெளிமாநிலத்திலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 3வது முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 2  கொள்கலன்களில்  40 மெட்ரிக் டன் ஆக்சிஜன்  ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனை  அதிகாரிகள் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு  மருத்துவமனைகளுக்கு  டேங்கர் லாரி மூலம்  பிரித்து அனுப்பி வைத்தனர்.  அந்த பணியின் பொது ரயில்வே அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: