தூத்துக்குடியில் கொரோனாவுக்கு தாசில்தார் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். வருவாய்த்துறை அதிகாரியான இவர், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்பு திட்டம், குடிமைப்பொருள்  வழங்கல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தாசில்தாராகவும் கலெக்டரின் உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது தூத்துக்குடி அரசு கேபிள் டிவி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென உடல் நலம்  பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று இறந்தார். அவரது உடல் கோரம்பள்ளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>