ஊரடங்கு கொண்டுவந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஊரடங்கு கொண்டு வந்த பிறகு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  சென்னையில்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. விதிகளை மீறியதால் அந்த மருத்துவமனைக்கு சுகாதார சட்டம் விதி 76ன் படி ரூ.1 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.  ரெம்டெசிவிர் மருந்து அவர்களிடம் இருக்க வேண்டிய அளவு 12 ஆகும். ஆனால் அங்கு இருந்ததோ 18. கூடுதலாக 6 எண்ணிக்கை இருந்தது. இது தொடர்பான விசாரணையில், பாண்டிச்சேரி ராமன் என்பவரிடம் மருந்தை வாங்கிய டாக்டர்  சுரேஷ் என்பவர் ஊசி தான் போட்டுள்ளார். திண்டிவனம் காவல் துறையினர் மிகவிரைவில் அவரை கைது செய்வார்கள். மருத்துவர்களின் ஆக்சிஜன் கொடுப்பது என்பது தவறு.

பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். மேலும் கூட்டத்தில் 4,5 மாநகராட்சியின் ஆணையர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் பேசினார்கள். அந்தவகையில்  சென்னை மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டு பேசினார். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ள 37 ஆயிரம் பேருக்கு 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தினந்தோறும்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை தெரிவித்தார். தடுப்பூசி போடப்படும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடவுள்ளோம் என்ற  செய்தியினையும் தெரிவித்தார். மாநகராட்சியின் 450க்கும் மேலான கார் ஆப்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்து, வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்ததிட்டங்களை எல்லாம் எடுத்துக்கூறினார்.

அதற்கு பிரதமர், சென்னையை போலவே மற்ற மாநகரங்களிலும் இதை பின்பற்றலாம் என்று தெரிவித்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஊரடங்கு கொண்டுவந்த பிறகு தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்துடன் நிற்கிறது. இந்த அளவு 2, 3 நாட்களாக  ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்தவகையில் இன்றும் (நேற்று) தொற்று குறையும் என்று எதிர்பார்க்கிறோம். 18-44 வயது வரை உள்ளவர்களுக்க தடுப்பூசி போட வேண்டும் என 46 கோடி ரூபாயை செலுத்தி, 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது.  நாளை மறுநாள் (நாளை) ஆலை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற வகையில் 18-44 வயதுடையவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: