இந்திய மக்கள் ஆட்சி கோட்பாடுகளை சிதைக்கிறது: பாஜ அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு  வருகின்றது. ஒரே நாடு ஒரே மொழி என்ற முழக்கத்துடன், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முயற்சிக்கின்றது. புதிய கல்விக் கொள்கை குறித்து, மாநில கல்வி அமைச்சர்களுடன் பேசாமல், நேரடியாக கல்வித்துறைச் செயலர்களை  ஒருங்கிணைத்து நடுவண் அரசு நடத்திய கூட்டத்தில், தமிழக அரசு பங்கு ஏற்காது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருப்பது, பாஜ அரசுக்குச் சாட்டை அடி ஆகும். கொரோனாவை கட்டுப்படுத்தும் கடமையில்  தவறிய பாரதிய ஜனதா அரசு, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்திய மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளைச் சிதைப்பதற்கும் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு, மதிமுக சார்பில்  கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: