தொற்று பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: உறவினர், விருந்தினரை வாங்க.. வாங்க.. என அன்புடன் அழைத்த காலம் மலையேறியது

 * ‘கட்டாயம் வரவேண்டாம்’ என்று வீடுகளில் தொங்கும் போர்டு

* கொரோனா உயிரை மட்டுமல்ல ; உறவையும் பிரிக்கும் சோகம்

சென்னை: கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து வீட்டிற்கு உறவினர்கள், விருந்தினர்களை வாங்க... வாங்க... என்று அழைத்த காலம் மலை ஏற தொடங்கி விட்டது. வீடுகளின் முன்பாக கட்டாயம் வர வேண்டாம் என்று  போர்டு தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளின் பலரின் உயிரை பிரித்த நிலையில், தற்போது உறவுகளையும் தூரத்தில் நிறுத்தி பிரித்து வைத்துள்ளதாக சமூக உறவுகளின் பேச்சாக இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு என்பது 30 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு என்பது 6ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதே போல கோவையில் பாதிப்பு 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி,  காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சியில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. உயிர்  இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு, கொரோனா வழிகாட்டி ெநறிமுறைகள், மருந்து பெட்டகம், சிறப்பு ஆம்புலன்ஸ், சீனாவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் என்று கொரோனாவை கட்டுப்படுத்த அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், சமூகத்தில் சிலர் கொரோனாவின் 2வது அலையைப் பற்றி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி வெளியில் நடமாடி வருகின்றனர். மக்கள் நடமாட்டத்தை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க  வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரத்தில் தற்போதைய கொரோனா பரவல் என்பது வித்தியாசமாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பரவும் நிலை தான் இருந்து வருகிறது. அது சிறியவர் முதல் பெரியவர் வரை வயது  வித்தியாசம் பாராமல் பரவி வருகிறது. இதனால், வீடுகளில் உள்ளவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர்.

வீடுகளுக்கு உள்ளேயே தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் உறவினர்கள் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், இறப்பு போன்றவற்றிற்கு சென்று வந்தாலே மறுநாள் காய்ச்சல் ஏற்படும் நிலையும் பல  இடங்களில் காணமுடிகிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா காலம் காலமாக இருந்த தமிழக மரபுகளில் ஒன்றான உபசரிப்பு என்பது இப்போது உறவுகளுக்கு உபத்திரமாக மாறிவிட்டது. அதாவது உறவினர்களை, நண்பர்களை வீட்டிற்கு வாங்க... வாங்க...என்று அழைத்த காலம்  என்பது தலைகீழாக மாறியுள்ளது. மாறாக வீட்டிற்கு வராதீர்கள் என்று ெசால்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஏற்றார் போல சில வீடுகளின் முன்பாக, அன்பு வேண்டுகோள் என்ற பெயரில் போர்டு வைத்துள்ளனர். அதில் ‘‘கொரோனா பெருந்தொற்றில் இருந்து உங்களையும், எங்களையும் காப்பாற்றி கொள்ள ஒத்துழையுங்கள். விருந்தினர்கள்,  வெளியாட்கள் யாரும் இல்லத்திற்கு வருவதற்கு கட்டாயமாக அனுமதி இல்லை. யாரும் கோபித்து கொள்ள வேண்டாம். நன்றி, நன்றி” என்று வாசகம் அடங்கிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இருந்தவர்  இன்று இல்லை

முதல் கொரோனா அலையின்போது மனிதர்களின் வருமானம் மட்டுமே போச்சு. ஆனால், 2வது அலையில் உறவினர், நண்பர்கள், விஐபிக்கள் என பலரின் உயிர்போகும் நிலையில் உள்ளது. இன்று சந்திப்பவர்களை நாளை, வரும் வாரங்களில்  சந்திப்போமா என்ற உறுதியை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் பணிக்கு செல்லும் நபர்கள் மாலையில் வீடு திரும்பும்போது தெருக்களில் திடீர் திடீரென்று கண்ணீர் அஞ்சலி ேபாஸ்டரை பார்க்க முடிகிறது.

அப்பா இறந்துவிட்டார்.. ஆனால் வராதீங்க

அக்கா என்றும்.. மாமா என்றும்... சித்தப்பா என்று அழைக்கும் உறவுகளை கூட அப்பா இறந்துவிட்டார். ஆனால் சாவுக்கு வராதீங்க.. வந்தால் அவரது முகத்தை கூட பார்க்க முடியாது. 16ம் நாள் காரியத்துக்கு சொல்கிறேன். அப்போது கூட  முடிந்தால் வாங்க. சம்பந்தி சடங்கு முறைகள் எல்லாம் வேண்டாம். நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ஒரு மகன் கூறும் நிலை தான் உள்ளது. இத்தனைக்கும் உறவினர், மகள், மனைவி என இறந்தவர்களின் சடங்குகளை ஊரோ  மெச்சும்படி செய்தவராக இறந்துபோனவர் இருப்பார். ஆனால் அவர் முகத்தை, அவருக்கான சடங்கை செய்ய முடியாமல் பத்தோடு பதினோராவது உடலாக, கும்பலோடு கும்பலாக ஊரே மெச்சிய நபரின் உடல் தகனம் செய்வது கொரோனா  பாதிப்பின் உச்சத்தை காட்டுகிறது.

Related Stories: