ஒரே நாளில் 4,329 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. அதில், தொடர்ந்து 2வது நாளாக தினசரி பாதிப்பு 3  லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை சரிந்து வருவது சற்று ஆறுதல் அளித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28  ஆயிரத்து 996 ஆகும். ஆனால் பலி எண்ணிக்கை தொடர்ந்து பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,329 பேர் பலியாகி உள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு 180 பேர் பலியாகின்றனர். இதன்  மூலம் மொத்த பலி 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 33 லட்சத்து  53 ஆயிரத்து 765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், வீட்டு தனிமையிலும் இருந்து வருகின்றனர்.

முன்னாள் ஐஎம்ஏ தலைவர் காலமானார்

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) முன்னாள் தலைவரான கே.கே.அகர்வால் (62) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். பத்ம விருது வென்ற இவர் கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா  முதல் அலை ஏற்பட்டதில் இருந்தே அகர்வால், தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து வந்தார். தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டக் கூடாது எனவும் இவர் நூற்றுக்கணக்கான வீடியோக்களை சமூக  வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>