கொரோனா உயிரிழப்புகளை மூடி மறைக்கும் மத்திய அரசு: இந்தியாவில் 7.5 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவலை வெளியிட்டது வாஷிங்டன் பல்கலைக்கழகம்

* குவியல்குவியலாக பிணங்கள் புதைப்பு

* கொத்துக்கொத்தாக சடலங்கள் எரிப்பு

* அள்ளிஅள்ளி உடல்களை ஆற்றில் வீசும் கொடூரம்

* உயிர்ப்பலி எண்ணிக்கையை பல மடங்கு குறைத்து காட்டுவது அம்பலம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பிணவறையில் இடம் போதாமல், சடலங்கள் வெட்ட வெளியில் போடப்படுகின்றன. மயானங்களில் சடலங்களை எரிக்க  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆற்றங்கரை, மைதானங்கள், மேம்பாலத்தின் கீழ் என பல இடங்களில் கொத்து கொத்தாக சடலங்கள் எரிக்கப்படுகின்றன. எரியூட்ட வசதியில்லாத மக்கள் சடலங்களை ஆற்றில் தூக்கி வீசுகின்றனர்.  இவ்வளவு அவலங்களுக்கும் காரணம், 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததுதான் என சர்வதேச ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.

அறிவியல் பூர்வமான எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்திய  மத்திய அரசு தற்போது தனது தவறை மறைக்க கொரோனா பலியையும் மூடி மறைக்கும் அவலம் அம்பலமாகி உள்ளது. இந்தியாவில் உண்மையான கொரோனா பலி 7.5 லட்சத்துக்கும் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை வாஷிங்டன்  பல்கலைக்கழகம் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான, சுகாதார கட்டமைப்புகள் மோசமாக உள்ள நாடுகளில் கொரோனா பரவினால் மனித பேரழவை ஏற்படுத்தும் என இப்போதல்ல, கொரோனா முதல் அலையின் போதே சர்வதேச விஞ்ஞானிகள்  எச்சரிக்கை விடுத்தனர்.

 ஆனால், முதல் ்அலையின் போது, கொரோனா வைரஸ் அவ்வளவு வீரியமிக்கதாக இல்லாததாலும், கடுமையான ஊரடங்காலும் இந்தியா பெரிய அளவில் பாதிப்பின்றி தப்பியது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பாதிப்பு  குறையத் தொடங்கியதும், கொரோனாவை வென்று விட்டதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டது. மத்திய சுகாதார  அமைச்சரும் இனி கொரோனாவால் பயமில்லை என மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைத்தார்.

ஆனால், இந்தியாவில் கொரோனா 2வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது, அது தீவிரமானால் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என ஜனவரி மாதமே இந்திய விஞ்ஞானிகளும், சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகளும் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.  உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களால் இந்தியாவில் மிகப்பெரிய அபாயம் ஏற்படலாம் என அறிவியல் ஆதாரங்களுடன் மத்திய அரசிடம் விளக்கி உள்ளனர். ஆனால், வழக்கம் போல் மத்திய அரசு தனது பிடிவாத கொள்கையால்  விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை துச்சமென தூக்கி எறிந்தது.

கொரோனா முதல் அலை கொடுத்த பாடத்தில் இருந்து கற்றுக்கொண்டு, அடுத்து வரும் சவால்களை சந்திக்கும் வகையில் திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆனால் முதல் அலையில் இருந்து எந்த பாடங்களையும் கற்கவில்லை.  மாறாக, கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் உத்தரகாண்டில் கும்பமேளாவை நடத்த அனுமதி கொடுத்தது. இது, வேறெந்த மக்கள் நலன் சார்ந்த அரசும் செய்யத் துணியாத செயல் என மோடி அரசை சர்வதேச ஊடகங்கள் விளாசின. இது  ஒருபுறம் இருக்க பிரமாண்ட தேர்தல் பிரசாரங்களையும் நடத்தியது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் போட்டி போட்டு கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

இதற்கு கொடுத்த விலைதான் இன்று நாடு முழுவதும் குடும்பத்திற்கு ஒருவர் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தந்ததும், தேர்தலை பிரமாண்டமாக நடத்தியதும் தான் கொரோனா 2வது அலையில்  மனித பேரழிவாக சுனாமி அலையாக மாற காரணம் என உலக சுகாதார நிறுவனம் முதல் லான்செட் மருத்துவ இதழ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இனி நிலைமை கைமீறிப் போய்விட்டது.  கொரோனா கட்டுங்கடங்காமல் போய் விட்டது. இனியாவது ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யவும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும், கிராம மக்களை கொரோனா பிடியிலிருந்து காக்கவும் நடவடிக்கை எடுப்பது மக்கள் நலனில் அக்கறை  கொண்ட அரசாக இருக்க முடியும். ஆனால் மத்திய பாஜ அரசு அதையும் செய்யவில்லை.

நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு போட வேண்டுமென பல விஞ்ஞானிகள் பரிசீலித்தும் அதை பிரதமர் மோடி காது கொடுத்து கேட்கவில்லை. முழு ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு மத்திய அரசுக்கு அவப்பெயர் வந்துவிடுமே  என்ற காரணத்தினாலேயே ஊரடங்கு போடுவதை மாநில அரசுகள் பொறுப்பில் விட்டு விட்டார். தடுப்பூசி உற்பத்தியை பெருக்கவும், மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் வழங்கி கைகொடுக்கவும் மத்திய அரசு  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, கொரோனா பலிகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது ஒருநாளைக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே ஒருநாளைக்கு சுமார் 25,000 பேர் கொரோனாவுக்கு பலியாவதாக சர்வதேச ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கழைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றம் மதிப்பீடு நிறுவனம் கொரோனா உற்பத்தியை பெருக்கவும், மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் வழங்கி கைகொடுக்கவும் மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கொரோனா பலிகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது ஒருநாளைக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே ஒருநாளைக்கு சுமார் 25,000 பேர் கொரோனாவுக்கு பலியாவதாக சர்வதேச ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை தருகின்றன.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனம் கொரோனா வைரசால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில், மயானங்களில்  எரிக்கப்படும் சடலங்கள், உள்ளாட்சி நிர்வாகம் வழங்கும் இறப்பு சான்றிதழ், உள்ளூர் பத்திரிகையாளர்கள் மூலமாக தகவல்களை சேகரித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவில் கிட்டத்தட்ட 4.8 லட்சம் அளவுக்கு கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவின் உண்மையான கொரோனா பலி 7.5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என  ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:

இந்தியாவில் கொரோனா மரணங்கள் பல மடங்கு மூடி மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தினசரி இறப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. குஜராத்தில் மே 1ம் தேதி  முதல் 10ம் வரை வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களின் எண்ணிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020ல் ஏப்ரல், மே மாதங்களில் 58,000 பேர் இறந்துள்ளனர். இதுவே இந்த ஆண்டு 1.23 லட்சம் பேர் இறந்துள்ளனர். சுமார் 65,000  இறப்பு சான்றிதழ்கள் கூடுதலாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான இறப்பு விகித அதிகரிப்பு என்றோ, வேறு காரணங்கள் என்றோ கூறிவிட முடியாது.

இவை முழுக்க முழுக்க கொரோனாவால் அதிகரித்த மரணங்களே. ஆனால் இதில் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு தரும் எண்ணிக்கை வெறும் 4,218 மட்டுமே. இதே போல உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், பீகார் என  பல்வேறு மாநிலங்களில் இறப்புகள் மறைக்கப்படுகின்றன.  இந்தியாவை பொறுத்த வரையில், கொரோனா பாதித்தவராக இருந்தாலும் இதய நோய், நீரிழிவு போன்ற இணை நோய்கள் இருந்தால், மாரடைப்பால் இறந்தவர் என கணக்கு காட்டப்படுகிறது. கொரோனா பாதிப்பில் இறந்ததாக  கூறப்படுவதில்லை. மேலும், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அங்கு நடக்கும் கொரோனா இறப்புகள் கணக்கிலேயே வருவதில்லை.

கொரோனா மரணங்கள்  மறைக்கப்படுகின்றன என்பதற்கு கங்கையில் மிதக்கும் சடலங்களும், கங்கை கரையில் புதைக்கப்படும் சடலங்களுமே சாட்சி. இறப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருப்பதால்தான் சடலங்கள் குவியல் குவியலாக எரிக்கப்படுகின்றன.

எரியூட்ட விறகு கட்டைகளுக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தான் அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள், ஆற்றில் சடலங்களை வீசுகின்றனர்.

இல்லாவிட்டால் ஆற்றங்கரைகளில் சடலங்களை அடக்கம்  செய்கின்றனர். இந்த சடலங்கள் எதுவும் கொரோனா எண்ணிக்கையில் வருவதில்லை. நகர்ப்புறங்களிலும் நாள்தோறும் பல முதியவர்கள் கொரோனாவுக்கு பலியாகின்றனர். ஆனால் பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைத்திருப்பதால்  அவை எதுவும் கொரோனா இறப்பு கணக்கில் வருவதில்லை. எனவே, உண்மையான கொரோனா இறப்பானது தற்போதைய அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர்களை கூட காப்பாற்றாத மத்திய அரசு

இதுவரை கொரோனாவுக்கு 1000 டாக்டர்கள் பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 736 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், கடந்த 5 மாதத்தில் 244 பேர் பலியாகி உள்ளனர்.  நேற்று முன்தினம் மட்டுமே ஒரேநாளில் 50 டாக்டர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 69 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் உள்ள டாக்டர்களில் வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி  போடப்பட்டுள்ளதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. டாக்டர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு போடுவதற்கு கூட போதுமான தடுப்பூசியை உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

Related Stories:

>