சீனா, அமெரிக்கா ஹாங்காங்கில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சரக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது..!!

சென்னை: சீனா, அமெரிக்கா ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் 52 கருவிகள் சரக்கு விமானங்கள் மூலம் சென்னை வந்தடைந்துள்ளன. கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கையை எடுத்துள்ள தமிழக அரசு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் பெற போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. 

மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆக்சிஜன் தயாரிப்பதற்கான 52 கருவிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளன. சீனா, ஹாங்காங் நாடுகளில் இருந்து 2 சரக்கு விமானங்கள் மூலம் 51 ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரங்களும், அமெரிக்காவில் இருந்து ஒரு சரக்கு விமானம் மூலம் 1 ஆக்சிஜன் தயாரிக்கும் எந்திரமும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. வரும் நாட்களில் மேலும் சில நாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள் சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: