குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி!: 71 இடங்களுக்கு விமானங்களை இயக்க முடிவு..!!

ரியாத்: குடிமக்கள் வெளிநாடு செல்ல ஓர் ஆண்டுக்கு பின் சவூதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சவுதி அரேபியா மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்த இந்த தடையால் வெளிநாடுகளில் பயின்று வரும் சவூதி அரேபியா மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டனர். 3 கோடி மக்கள் தொகை கொண்ட சவூதியில், 1.1 கோடி பேருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்  வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டவர்களும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சவூதி அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான சவுதியா, 43 சர்வதேச இடங்கள் உட்பட 71 இடங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது. அதேபோல், வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. 

Related Stories: