செட்டிநாடு முட்டை மசாலா

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

அடுப்பில்  பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரித்துக் கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த பின்பு பச்சை முட்டையை கலக்கி ஊற்றி கிளறி பிறகு அவித்த முட்டையை சேர்த்து மல்லி தூவி இறக்கவும்.