காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை: காஞ்சிபுரம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்   ந.மனோகரன் கொரோனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் வசிப்பவர் ந.மனோகரன் (58), இவர், சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு அர்பன் வங்கியின் முன்னாள் தலைவர்.  காஞ்சிபுரம் நகர அமமுக நகர செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். வாக்குப்பதிவு என்னும் பணியின்போது அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 16ம் தேதி உயிரிழந்தார். இவருக்கு பாக்கியா என்ற மனைவியும் சூர்யா, ஸ்வேதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

Related Stories:

>