சென்னையில் கொரோனா பாதிப்பு: 5 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் தினசரி பாதிப்பு கடந்த  7 ஆயிரத்தை கடந்து இருந்தது. கடந்த 10ம் தேதி 7,149 பேரும், 11ம் தேதி 7,466 பேரும், 12ம் தேதி 7,500 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். ஆனால் 13ம் தேதியில் இருந்து தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி கடந்த 13ம் தேதி 6,991 பேரும், 14ம் தேதி 6,538 பேருக்கு என இரண்டு நாட்கள் குறைந்த நிலையில் 15ம் தேதி 6,640 ஆக சற்று அதிகரித்தது. ஆனால் 16ம் தேதி 6,247 ஆகவும், 17ம் தேதி நேற்று 6,150 ஆக குறையத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்னையை பொறுத்த வரையில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாகவே சதவீத அளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 30,108 பேருக்கு பரிசோதனை  செய்ததில் 6,538 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.  சென்னையில் இதுவரை 4,44,371 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,90,364 பேர்  குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 48,156 பேர் தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இதுவரை 5,851 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: