கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் வழங்கினார்

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்கினார்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல், முதல்வரின் கொரோனா நிவாரண பணிகளுக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை,  நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனாவை ஒழிக்க அரசு கொண்டுவந்துள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அப்போது தான் இந்த கொரோனா என்கின்ற ஒன்றை ஒழிக்க முடியும். இது மக்களுக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>