விக்ரம் 30 லட்சம் நிவாரண நிதி

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் வழங்கினார்.  கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்தவர்களும் நிவாரண தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் நிவாரண நிதிக்காக நடிகர் விக்ரம், 30 லட்சத்தை வங்கி மூலம் அனுப்பினார்.

Related Stories:

>