லா லிகா தொடரில் ஏமாற்றம்

பார்சிலோனா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் தொடரில், செல்டா விகோ அணியிடம்  2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்ற பார்சிலோனா ஆண்கள் அணி சாம்பியன்  ஆகும் வாய்ப்பை இழந்தது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற 19 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இத்தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், 37வது லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன.  அதில் ஒரு போட்டியில் பார்சிலோனா அணி செல்டா விகோ அணியுடன் மோதியது. சொந்த மைதானத்தில் நடந்த இப்போட்டி முழுவதும் பந்தை பார்சிலோனா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி 28வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். எனினும், செல்டா விகோ அணியின் லாரென்ஸோ மினா 38வது மற்றும் 89வது நிமிடத்தில் கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற உதவினார். இந்த தோல்வியின் மூலம் லா லிகா கோப்பையை வெல்லும் வாய்ப்பை பார்சிலோனா இழந்தது. அந்த அணி இதுவரை 37 ஆட்டங்களில் 76 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. முதல் இடத்தில் உள்ள அத்லெடிகோ மாட்ரிட் 83 புள்ளிகளும்,  2வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் 81 புள்ளிகளும் பெற்றுள்ளன.

Related Stories: